எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!
Actor Vishal thanks CM Vijay for the announcement to close 717 wine shops | தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பல செயல்களை செய்து மக்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்று வருகிறார். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற போது மின்சார கட்டணம், பெண்கள் பாதுகப்பு ஆகிய கோப்புகளில் முதலமைச்சராக முதலில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று தமிழகச் சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்ற தலைவர்கள் அனைவரும் பதவி பிரமானம் செய்த பிறகு ஒரு முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார்.
அதன்படி பள்ளிகள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். அதன்படி தமிழகத்தில் தற்போது மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.




முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்:
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, உங்களுக்குப் பாராட்டுகள், உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அன்புள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே, குறிப்பாகப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்ததற்கு நன்றி. என்னவொரு நடவடிக்கை. பல சிறுமிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, ஆர்.கே. நகரில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவி, தினமும் டாஸ்மாக் கடையைக் கடந்து வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றிப் புகார் கூறி வந்தார். அவரும், பொதுமக்களில் பலரும் உங்களையும் உங்கள் முடிவையும் பாராட்டுவார்கள். நமது முதலமைச்சரின் இந்த முடிவால், இந்தத் தொல்லையிலிருந்து விடுபட்டு, என்னையும் சேர்த்துப் பலரின் முகத்தில் புன்னகை என்றும் நிலைத்திருக்கும். அன்புள்ள விஜய், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இன்று உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் என் வணக்கங்கள்.
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kudos to you ,whistles to u. Hats off to u. Dear CM josephvijay avargal. Thank u for the announcement to close 717 wine shops especially the ones near schools. Wat a move. So many girl children hav been facing harassment especially the one I know in rk nagar where a girl… pic.twitter.com/vYria0MIaB
— Vishal (@VishalKOfficial) May 12, 2026
Also Read… ரிலீஸ் தேதியை லாக் செய்தது கட்டாளன் படக்குழு – வைரலாகு போஸ்ட்