AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

Celebrities who attended Vijays swearing-in ceremony as Chief Minister: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாகவும், தற்போது முழு அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் இன்று 2026 மே 10ம் தேதியில் சென்னை நேரு அரங்கத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் என விவரமாக பார்க்கலாம்.

திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!
விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 May 2026 10:20 AM IST

சினிமாவில் நடிகராகவும், தவெக கட்சி (TVK Party) தலைவராகவும் இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் நடந்துமுடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly elections) தனது கட்சியின் மூலம், போட்டியிட்ட நிலையில் அதிக டெபாசிட் பெற்று முன்னிலை தனிக்கட்சியாக அங்கீகாரம் பெற்றிருந்தார். அந்த வகையில் தனது கூட்டணி கட்சியில் ஆதரவுடன் இன்று 2026ம் ஆண்டு மே 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தமிழாக முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த முதல்வராக பதவியேற்கும் விழா, சென்னையில் உள்ள நேரு உள் அரங்கத்தில் (Nehru Stadium in Chennai) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த வகையில் இதில் நடிகை திரிஷா கிருஷ்ணன் ?(Trisha Krishnan), தனது தாயுடன் கலந்துகொண்டுள்ளார். மேலும் தளபதி விஜய்யின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தமிழக முதல்வராக பதவியேற்கும் விஜய்.. விழாவில் கலந்துகொண்ட நடிகை திரிஷா!

தளபதி விஜய்யின் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள்:

விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கிருஷ்ணன், நடிகை சங்கீதா க்ரிஷ், பாடகர் க்ரிஷ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, நடிகர் ஜெய், தயாரிப்பாளர் டி.சிவா போன்ற தமிழ் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் தளபதி விஜய்யின் நண்பர்களான சஞ்சீவ், என பல்வேறு நண்பர்களும் மற்றும் தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மேலும் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!

விஜய்க்கு வாழ்த்து கூறி ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தளபதி விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் வகையில் அவருக்கு பல்வேறு நட்சத்திர நடிகர்களும் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். முதல் வாழ்த்தாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகர் சிபி சத்யராஜ் போன்ற பல்வேறு பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்னும் பல தென்னிந்திய பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை, முதல்வராகும் தளபதி விஜய்க்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us