AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sriman: ரொம்ப பெருமையா இருக்கு.. மக்கள் எல்லாரும் உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. முதல்வர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்!

Sriman Praises CM Vijays TASMAC Closure Order: நடிகர் ஸ்ரீமன், தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர். அந்த வகையில் தமிழக முதல்வர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள மதுபான கதைகளை மூட உத்தரவிட்டது குறித்து பெருமிதம் கொள்வதாக நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Sriman: ரொம்ப பெருமையா இருக்கு.. மக்கள் எல்லாரும் உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. முதல்வர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்!
முதல்வர் தளபதி விஜய் மற்றும் நடிகர் ஸ்ரீமன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 May 2026 16:33 PM IST

கோலிவுட் சினிமாவில் படங்களில் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீமன் (Sriman). இவர் தமிழில் கடந்த 1992ம் ஆண்டில் மௌன மொழி (Mouna Mozhi) என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவருகிறார். இவர் தமிழக முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய்யுடன் (CM Thalapathy Vijay) படங்களில் இணைந்து நடித்துள்ளார். அத வகையில் இவர் விஜய்யுடன் முதலில் இணைந்து நடித்த படம்தான் லவ் டுடே (Love Today). இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்திருந்த பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். வசீகரா, ப்ரண்ட்ஸ், போக்கிரி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் படங்களில் மட்டும் நண்பராக இல்லாமல், முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் தமிழக முதல்வராக விஜய் பதிவியேற்ற விழாவிலும், நடிகர் ஸ்ரீமன் குடும்பத்துடன் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் முதலமைச்சர் விஜய், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கிட்டத்தட்ட 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், அதற்கு பெருமைப்படுவதாக நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!

முதல்வர் தளபதி விஜயை பாராட்டி நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட எமோஷனல் வீடியோ பதிவு:

அந்த வீடியோவில் பேசிய நடிகர் ஸ்ரீமன், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். நேற்றிலிருந்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இன்று காலை பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் எப்படி எண்ணிக்கை அதிகமாக கூடிக்கொண்டே இருந்ததோ, அந்தமாதிரி உங்களின் தேர்தல் அறிக்கை செயல்வடிவத்தை டிக் செய்துகொண்டே போறீங்க.

உங்களின் எல்லா முயற்சிகளுக்கும், எல்லா முடிவுகளுக்கும், நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்திற்கும் எல்லாவல்ல கடவுள்களும் ஆசிர்வதிக்கட்டும். மக்கள் அனைவரும் உங்களின் பக்கம் நிற்கிறார்கள். பெருமையாக இருக்கிறது அவ்வளவுதான்” என எமோஷனலாக அந்த வீடியோவில் நடிகர் ஸ்ரீமன் பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஃபஹத் ஃபாசிலை வைத்து நான் எடுக்கும் படம் இப்படிதான் இருக்கும் – இயக்குநர் பிரேம் குமார் அப்டேட்!

மதுபான கடைகளை மூடும் உத்தரவை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதை பாராட்டி பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். மேலும் நடிகர் விஷாலும் தமிழக முதல்வர் விஜயை பாராட்டி வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us