AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Athrvaa: இதயம் முரளி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த அதர்வா – படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!

Idhayam Murali Dubbing Complete: இளம் நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் புதிய திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதன் டப்பிங் பணிகளை அதர்வா முழுமையாக நிறைவு செய்துள்ளார். இது குறித்து படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

Athrvaa: இதயம் முரளி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த அதர்வா – படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!
அதர்வாவின் இதயம் முரளி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jun 2026 14:27 PM IST

நடிகர் அதர்வா (Atharvaa) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) சகோதரனாக அதர்வா நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இப்படத்தை அடுத்ததாக டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் அதர்வா நடித்துவந்த புதிய திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதில் அதர்வா நாயகனாக நடிக்க, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran) இயக்கியுள்ளார். இதில் அதர்வா, கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukundan), ஃபஹத் பாசில் (Fahadh Faasil), நட்டி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், வரும் இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் அதர்வா முழுமையாக முடித்துள்ளாராம். இது குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: எனது அடுத்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா கிடையாது.. இப்படிதான் இருக்கும் – துருவ் விக்ரம்!

இதயம் முரளி படத்தில் டப்பிங் பணியை அதர்வா நிறைவு செய்தது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இதயம் முரளி படமானது ஒரு வித்தியாசமான காதல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராகியுள்ளது. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் என இரு நடிகைகள் இணைந்து அடித்துள்ளனர். இந்த 2026ம் ஆண்டில் அதர்வாவின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் நிலையில், வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: பென்ஸ் பட ஷூட்டிங்கை எப்போது முடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.. அவரே கொடுத்த அப்டேட் இதோ!

இதயம் முரளி என்ற டைட்டிலில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், அதர்வாவிற்கும் இது மிகவும் ஸ்பெஷலான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் 2026 ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படக்குழுவும் தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us