VJ Manimegalai: இந்து மற்றும் முஸ்லீம் என இரு முறைப்படி கிரஹப்பிரவேசத்தை நடத்திய தொகுப்பாளினி மணிமேகலை!
Manimegalai Interfaith Housewarming: வி.ஜே.மணிமேகலை சமீபத்தில் புதியதாக வீடு கட்டியிருந்த நிலையில், கிரஹப்பிரவேசம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கிரஹப்பிரவேச விழாவை இரு மத முறைப்படி மணிமேகலை மற்றும் அவரின் கணவர் ஹுஸைன் நடத்தியுள்ளார்கள். இது இணையத்தில் மக்களிடையே பாராட்டப்பட்டுவருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி மற்றும் யூடியூபராக இருந்துவருபவர் வி.ஜே.மணிமேகலை (VJ Manimegalai). இவர் தமிழில் ஸ்டார் விஜய் (Vijay TV), சன் மியூசிக் மற்றும் ஜீ தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக (Hostess) பணியாற்றியுள்ளார். மேலும் குக் வித் கோமாளி (Cook With Coomali) என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கோமாளியாகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றும்போது நடந்த சில பிரச்சனையின் காரணமாக விஜய் டிவியிலிருந்து மொத்தமாக விலகிவிட்டார் என்று கூறலாம். தற்போது ஜீ தமிழ் மற்றும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார். இவர் “ஹுஸைன் மணிமேகலை” (Hussain Manimegalai) என்ற யூடியூப் சேனலையும் நடத்திவருகிறார்.
மேலும் இவர் புதிதாக இல்லம் ஒன்றை கட்டியுள்ள நிலையில், அதன் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் என இரு மதத்தின் முறைப்படி இவர் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை மணிமேகலை மற்றும் அவரின் கணவர் ஹூசைன் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: விஜய் டிவி ரசிகர்களே அடுத்த சீரியலுக்கு தயாரா? – வைரலாகும் புரோமோ!
கிரஹப்பிரவேசம் குறித்து மணிமேகலையின் கணவர் ஹுஸைன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
இரு மத முறைப்படி நடந்தது மணிமேகலை – ஹுஸைன் இல்ல கிரஹப்பிரவேசம்:
தொகுப்பாளினி மணிமேகலை ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியேற்றிவரும்போதே, நடன இயக்குநரான ஹுஸைன் என்பவரை காதலித்துவந்தார். மணிமேகலை இந்து மதத்தை சேர்த்தவர் மற்றும் ஹுஸைன் ஒரு இஸ்லாமியர். இந்நிலையில் இவர்கள் இருவருமே காதலித்து தங்களின் திருமணத்தை செய்துகொண்டனர். திருமணத்திற்கு பல சிக்கல்களை சந்திருந்தும், த்ற்போதுவரையிலும் ஒன்றாகவே வாழ்த்துவருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு சொந்த வீடு இருக்கும் நிலையில், தற்போது தங்களின் உழைப்பில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை காட்டியுள்ளனர். இவர்கள் எப்போதுமே, இந்து மற்றும் முஸ்லீம் மதங்களை விட்டுக்கொடுக்காமல் மற்றும் சமமாக பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு பட டீசருக்கான டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி
அதுபோலவே தங்களின் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசத்தை, இந்து மற்றும் முஸ்லீம் என இரு மதத்தின் முறைப்படியே சிறப்பாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுவருகிறது. மேலும் மணிமேகலைக்கு பலரும் தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த கிரஹப்பிரவேச நிகழ்ச்சியானது கடந்த 2026 மே 29ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், அது தொடர்பான பபுகைப்படங்களை இவர்கள் தற்போது வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.