AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nooru Saami: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!

Vijay Antonys Nooru Saami: இயக்குநர் சசியின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ள புது படம் நூறு சாமி. இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா இணைந்து நடித்துள்ளனர். நிஜ கதையில் இப்படம் உருவாகியிருந்த நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட உண்மையான காரணம் என்ன என பார்க்கலாம்.

Nooru Saami: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!
நூறு சாமி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jun 2026 11:39 AM IST

தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பிலும் சரி, இசையமைப்பில் சரி பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் முதல் படம்தான் நூறு சாமி (Nooru Saami). இதை தமிழில் பிச்சைக்காரன் (Pichaikaaran), சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்வாசிகா (Swasika) நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இது 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. அவ்வாறு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட என்ன இருக்கிறது என விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: அம்மாவாக போகிறாரா நடிகை சமந்தா? வைரலாகும் போட்டோ

நூறு சாமி படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணம் இதுதான்:

இப்படமானது நிஜ சம்பவத்தை மையமாக கொண்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது. இதில் ஸ்வாசிகா செல்வி என்ற விதவை பெண்ணாக நடித்துள்ளார். தனது கணவரின் இறப்பிற்கு பின், குழந்தைகளுடம் தஹனியாக கஷ்டப்படும் ஒரு தாயின் கதையாகும். பிச்சைக்காரன் படத்தில் ஒரு தாயை தெய்வமாக காட்டிய சசி, இப்படத்தில் ஒரு தாயை ஒரு மனுஷியாக காட்டியிருக்கிறார். ஒரு பெண் விதவையான பிறகு இந்த சமூதயத்தில் அவருக்கு கிடைக்காத மதிப்பு, மரியாதை மற்றும் அவரை பார்க்கும் கண்ணோட்டம் குறித்து விளக்குகிறது நூறு சாமி. விதவையான பெண் மறுமணம் செய்துகொள்ள நினைக்கும்போது, அவரை இந்த சமூகம் இவரு நடத்துகிறது.

எவ்வாறு பேசுகிறது என்பதை இந்த நூறு சாமி படம் தெரிவிக்கிறது. ஒரு வாழாவெட்டியாக இருந்த பெண்ணுக்கு ஒரு ஆண் வாழ்க்கை கொடுப்பது என்ற நிதர்சனத்தை உடைத்து, ஒரு ஆணுக்கு பெண் வாழ்க்கையை கொடுக்கமுடியும் என்ற உண்மையை கூறுகிறது இந்த நூறு சாமி படம். அதனால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். மேலும் இப்படம் பெங்களுக்கான படம் மட்டுமல்ல, முக்கியமாக ஆண்களும் இப்படத்தை பார்க்கவேண்டும்.

நூறு சாமி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இதையும் படிங்க: நான்தான் பவழ மல்லி-னு எப்படி கண்டுபிடிசீங்க.. ஓஜி பவழ மல்லி வெளியிட்ட வீடியோ வைரல்!

Follow Us