ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!
Actor Arjuns Blast Movie OTT Release Update | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ப்ளாஸ்ட். இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். அதிக அளவில் இவர் ஆக்ஷன் படங்களில் நடித்ததால் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இவரை அன்புடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று அழைத்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் படங்களில் நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவ்வபோது படங்களை இயக்குவது மற்றும் தயாரிப்பது என்ற பணிகளையும் செய்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக மட்டும் இன்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ப்ளாஸ்ட்.
கடந்த 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த ப்ளாஸ்ட் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கி இருந்தார். இதுதான் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.




நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் ப்ளாஸ்ட் படம்:
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்த ப்ளாஸ்ட் படத்தை தயாரித்து இருந்த நிலையில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி ப்ளாஸ்ட் படம் வருகின்ற 25-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… தனுஷ் – மாரி செல்வராஜ் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kudumbathula prachana irukalam, aana indha kudumbathukitta prachana iruka kudadhu 🤭🔥 pic.twitter.com/RJ1AiSKdQY
— Netflix India South (@Netflix_INSouth) June 22, 2026
Also Read… இரண்டு வானம் படம் பார்த்து அழுதுவிட்டேன் – நடிகர் விஷ்ணு விஷால்