செப்டம்பரில் வெளியாகும் டிமான்டி காலனி 3 படம் – அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Demonte Colony 3 Movie Release Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள டிமான்டி காலனி 3 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அருள் நிதி தனது கெரியரை சினிமாவாக தேர்வு செய்தார். அதன்படி அவர் சினிமாவில் நாயகனாக கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வெளியான வம்சம் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அருள் நிதிக்கு பல விருதுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருள் நிதி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களில் நடித்து உள்ளார். அதில் பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக நடிகர் அருள் நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு டிமான்டி காலனி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது மூன்றாவது பாகமும் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




செப்டம்பரில் வெளியாகும் டிமான்டி காலனி 3 படம்:
அதன்படி இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கி உள்ளார் டிமான்டி காலனி 3 படம். நடிகர் அருள் நிதி நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை பிரியா பவாணி சங்கர் நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டிமான்டி காலனி 3 படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கெணத்த காணோம் படம் வெறும் காமெடி மட்டும் இல்ல… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
டிமான்டி காலனி 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Just the thought of this place will give you Shivers, thrills and nightmares 🥶💀
Brace yourself for the darkness!!! The doors of #DemonteColony3 is about to open!!
Releasing worldwide on September 11 🔥@arulnithitamil @AjayGnanamuthu @priya_Bshankar @Sudhans2017… pic.twitter.com/J92aUgFaCz
— Passion Studios (@PassionStudios_) June 22, 2026