சமூக வலைதளத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ஓம் படத்தின் டைட்டில் வீடியோ
OM First Strike | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் 55-வது படமாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் ஓம் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படக்குழு வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் எத்தனை பார்வைகளைப் பெற்றுள்ளது என்று பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 54 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் இவர் அவ்வபோது படங்களை இயக்கியும் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் நடிகர் தனுஷிற்கு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே பான் இந்திய அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் அவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான கர படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 55-வது படத்திற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்தார் தனுஷ்.
இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பதாக தெரிவித்ததும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் டீசரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.




30 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ஓம் படத்தின் டைட்டில் வீடியோ:
அதன்படி கடந்த 18-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு தனுஷின் 55-வது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. அதில் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டைட்டில் வீடியோவிலேயே ஆக்ஷன் காடிகள் நிறைந்து இருந்ததால் படம் நிச்சயமாக ஒரு பவர் பேக் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் மொத்தம் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… ஜித்து மாதவன் எழுத்தில் சிதம்பரம் இயக்கத்தில் எப்படி இருக்கு பாலன் தி பாய் படம்? விமர்சனம் இதோ
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
30 Million cumulative views 🔥
The storm has now become a worldwide chant 🌪️ #OM First Strike ▶️ https://t.co/zDJd9F308y@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr… pic.twitter.com/XtzAo4SKUf
— Wunderbar Films (@wunderbarfilms) June 19, 2026
Also Read… Vekkai: நைட்டு நிலா.. ஜி.வி.பிரகாஷின் வெக்கை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!