AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரித்விராஜ் சுகுமாரின் நோபடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

I Nobody Movie Trailer Will Be Released Tomorrow | பான் இந்திய அளவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஐ நோபடி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

பிரித்விராஜ் சுகுமாரின் நோபடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஐ நோபடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 19:19 PM IST

மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்கள் வெளியாகி வருகின்றது. இதில் அதிக அளவில் மலையாள மொழியிலேயே படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் அவ்வபோது படங்களை இயக்குவது மற்றும் தயாரிப்பதையும் செய்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக வலம் வரும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்தப் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ நோபடி. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகிறது ஐ நோபடி படத்தின் ட்ரெய்லர்:

இயக்குநர் நிசாம் பஷீர் எழுதி இயக்கி உள்ள இந்த ஐ நோபடி படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ நோபடி படத்தின் ட்ரெய்லர் நாளை 18-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மின் வெட்டு குறித்த சர்ச்சை பேச்சிற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்

பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Follow Us