AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடலின் புரோமோ வீடியோ

Pattampoochi Song Promo | நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான பட்டாம்பூச்சி என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடலின் புரோமோ வீடியோ
பட்டாம்பூச்சி பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Jun 2026 18:45 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கமாக நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு என்ற படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார். படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி உள்ளது. இது இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழ் சினிமாவில் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் வெங்கி அட்லூரி. மேலும் இறுதியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் அவருக்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வெளியானது பட்டாம்பூச்சி பாடலின் புரோமோ வீடியோ:

மேலும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து இன்று பட்டாம்பூச்சி என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தை போல பாடலும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் ரிலீஸாகவில்லை என்றால் என்ன நடக்கும்? படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கட்டா குஸ்தி 2 படம் யாருக்கானதாக இருக்கும் – நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்

Follow Us