AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தப்பா புரிஞ்சிக்கிட்டு தற்குறினு திட்டுறாங்க.. நான் என் கருத்தில் இறுதியாக இருக்கிறேன் – மாஸ்டர் மகேந்திரன் பதில்!

Master Mahendran Respond: கோலிவுட் மக்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சமீபத்தில் தமிழக மின்சாரம் பற்றாக்குறை குறித்து, தனது கருத்தை முன்வைத்து பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அது குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

தப்பா புரிஞ்சிக்கிட்டு தற்குறினு திட்டுறாங்க.. நான் என் கருத்தில் இறுதியாக இருக்கிறேன் – மாஸ்டர் மகேந்திரன் பதில்!
மாஸ்டர் மகேந்திரன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Jun 2026 14:36 PM IST

கோலிவுட் சினிமாவில் சரத்குமாரின் (Sarathkumar) நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் மாஸ்டர் மகேந்திரன் (Master Mahendran). இவர் இப்படத்தில் சிறப்பான வசனம் பேசும் குழந்தையாக நடித்து, அனைவரையும் கவர்ந்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் குழந்தை வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். இதையடுத்து 2010ம் ஆண்டிலே ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கியிருந்த நிலையில், இவருக்கு அந்தளவிற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில் வெளியான மாஸ்டர் என்ற படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதில் விஜய் சேதுபதியின் இளமைப் பருவ பவானி வேடத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தமிழக மின்சார பிரச்சனை தொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருந்தார். இவரின் அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்கான நிலையில், பலரும் விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இந்நிலையில் தனது பேச்சில் எந்த தவறும் இல்லை, எனது கருத்தில் உறுதியாக இருப்பதாக மாஸ்டர் மகேந்திரன் விளக்கமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் சினிமாவில் இருந்தே விலகிடலாம்னு நினச்சேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்து பேசிய மாஸ்டர் மகேந்திரன்:

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில், “நான் பேசுனா வீடியோவை முழுசா பார்க்காமல், ஷார்ட்ஸ்ஸ பார்த்துவிட்டு எதையாவது பரப்பவேண்டியது. மின்சார தேவை அதிகமாக இருக்கு, அதனால சோலார் பயன்படுத்தியிருந்தால், இந்த மின்சார பிரச்சனை இருந்தும் இருக்காது என சொன்னேன். கேரளா கொச்சின் ஏர்போர்ட் முழுக்க சோலார் சிஸ்டத்தில்தான இயங்குது. அங்க சாத்தியம்னா இந்த முடியாத?, நான் பேசியதை தப்பா புரிஞ்சிகிட்டு என்னை தற்குரினு திட்டுறாங்க.

இதையும் படிங்க: பாலிவுட்டில் டூ மோலிவுட்… பிரித்விராஜ் – மஞ்சு வாரியர் படத்தை தயாரிக்கும் கரண் ஜோஹர்

அப்போ நான் பேசுனது தற்குறித்தனமா?, இல்ல தப்பா புரிஞ்சிக்கிட்டவங்க தற்குறியா?. அதனால நான் என்னோட கருத்து உறுதியாக இருக்கிறேன். அதுல இருந்து பின்வாங்குறதா இல்லை” என அதில் அவர் விளக்கமாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகிவருகிறது.

நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

இவர் தமிழில் இறுதியாக இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளியான 29 என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என கூறலாம். இதையடுத்து மேலும் சில படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us