அண்ணன் முதலமைச்சர் விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி – வைரலாகும் சிம்புவின் போஸ்ட்
Simbu met CM Vijay | தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் தளபதி விஜய். இவரை திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து நேரில் சந்தித்து வரும் நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று நேரில் சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தவர் நடிகர் தளபதி விஜய். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தான் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தெரிவித்து வந்தார். சினிமாவில் ஒரு நடிகனாக வந்த தன்னை உச்ச நடிகராக மாற்றிய மக்களுக்கு தன்னால் முடிந்தவற்றை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியை தொடங்கியதாக தொடர்ந்து கூறி வந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்று தற்ப்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்து முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
தளபதி விஜய் முதமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல வரவேற்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையுலகில் இருந்து ஒருவர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றது தமிழ் திரையுலகினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பலரும் தொடர்ந்து தளபதி விஜயை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரித்து வருகின்றனர்.




அண்ணன் முதலமைச்சர் விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி:
அந்த வகையில் நேற்று நடிகர் சிலம்பரசன் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அரசன் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் சிலம்பரசன் தான் முதலமைச்சர் விஜயை நேரில் சென்று சந்தித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சிலம்பரசன் கூறியதாவது, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணாவை இன்று சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. தமிழக மக்களுக்குச் சேவையாற்றும் அவருக்கு வலிமையும், வெற்றியும், இறைவனின் ஆசிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்து இருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… முதல்வர் விஜயை நேரில் சந்தித்தபோது அவர் சொன்னது என்ன? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍@CMOTamilnadu pic.twitter.com/1UXcZoW4Zp
— Silambarasan TR (@SilambarasanTR_) June 15, 2026
Also Read… இந்த போட்டோவில் சிலம்பரசனுடன் இருக்கும் முக்கிய பிரபலம்.. அது யார் தெரியுமா?