ஜிவி பிரகாஷ் பர்த்டே… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு
Viswanath and Sons team celebrate GV Prakash Birthday | நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படக்குழுவினர் ஜிவி பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு பதிவு ஒன்றை தங்களது பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகன் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது இசையில் வெளியான மெலடி, ஃபோக், சாட் என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இசையமைப்பது நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி மற்ற மொழிகளிலும் இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். அதன்படி தெலுங்கு சினிமா இயக்குநர் வெங்கி அட்லூரியின் கடந்த சிலப் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் தான் வெங்கி அட்லூரி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் கூட்டணி வைத்தனர் முதன் முதலில். இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்திலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




ஜிவி பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் டீம்:
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு தற்போது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் மற்றும் வெங்கி அட்லூரி இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஜிவி பிரகாஷ் குமார் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing the Musical Powerhouse @gvprakash a very Happy Birthday 😍💥
And the first single from #VishwanathAndSons carries all the hallmarks of a GV Prakash chartbuster ❤️🔥💯
Wait for it 🙌🏼
Team #VishwanathAndSons #VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/0V9bXE722v
— Sithara Entertainments (@SitharaEnts) June 13, 2026
Also Read… விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை புகழ்ந்த இயக்குநர் எச்.வினோத்