AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்த் – சூர்யா யார் அந்த 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் யார் நடிப்பது? வைரலாகும் தகவல்!

Actors Rajinikanth and Suriya | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா இருவரும் அவர்களின் அடுத்தடுத்தப் படங்களில் மருத்துவர்களாக நடிக்க உள்ளனர். அதில் யார் 5 ரூபாய் டாக்டரின் வேடத்தில் நடிக்க உள்ளனர் என்று பார்க்கலாம்.

ரஜினிகாந்த் – சூர்யா யார் அந்த 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் யார் நடிப்பது? வைரலாகும் தகவல்!
ரஜினிகாந்த் - சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2026 10:59 AM IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் பல முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது 173-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து இயக்குநர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது.

இயக்குநர்கள் சுந்தர் சி மற்றும் சிபி சக்ரவர்த்தி இருவரும் படத்தின் இயக்குநர்களாக பேசப்பட்டு பிறகு படத்தில் இருந்து விலகிவிட்டனர். தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தலைவர் 173 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

யார் அந்த 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் யார் நடிப்பது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் (இது ‘5 ரூபாய் மருத்துவர்’ கதாபாத்திரம் அல்ல). இப்படம் ஒரு அதிரடி கலந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், ‘சூர்யா 48’ படத்தில் சூர்யா ‘5 ரூபாய் மருத்துவர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இப்படம் ஒரு ஊக்கமளிக்கும் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ‘சூர்யா 47’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் இந்த மாதத்திற்குள் நிறைவடையும். சூர்யா தனது திரைப்படப் பணிகளை விரைவாக முடித்து வருகிறார்.

Also Read… இளம் வயதில் சிம்பொனி இசையமைத்த லிடியன் நாதஸ்வரம்… பெருமை கொள்ளும் தமிழ் நாடு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த ஆட்டம் நிக்காது… வசூலில் வியக்க வைக்கும் கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Follow Us