AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது பெத்தி படம்

Peddi Movie Box Office Collection | தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பெத்தி. இந்தப் படம் 2026-ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது பெத்தி படம்
பெத்தி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2026 13:08 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா. அதன்படி தெலுங்கு சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான உப்பெனா என்ற படதின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் புஜ்ஜி பாபு சனா. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ராம் சரணை இயக்க வாய்பைப் பெற்றார் புஜ்ஜி பாபு சனா. அதன்படி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் கடந்த 4-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது பெத்தி படம். நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து உள்ளார்.

மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விருத்தி சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது பெத்தி படம்:

ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்த பெத்தி படம் தொடர்ந்து வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி படம் வெளியாகி 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த 2026-ம் ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக தற்போது மாறியுள்ளது. அதன்படி பெத்தி படம் இதுவரை 366 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… இதயம் முரளி படத்தின் ‘வான் வான்’ பாடலின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!

பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழையும் பரிமளா & கோ படம் – மகிழ்ச்சியில் படக்குழு

Follow Us