மண்டாட்டி படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு – வைரலாகும் பதிவு
Sooris Mandaadi Movie Will Be Released On September 4th | நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்கும் கதையின் நாயகன்களாக நடித்து வருகின்றனர். இதில் குறிப்பாக மலையாள சினிமாவில் இந்த வழக்கம் பல ஆண்டுகளாக இருக்கின்றது. அவர்களுக்கு கதைக்கு அவர் நன்றாக இருப்பார் என்றால் எந்த நடிகரையும் கதையின் நாயகனாக நடிக்க வைக்க தயக்கம் காட்டமாட்டார்கள். மேலும் அவர்களின் நாயகன்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் காமெடி கதாப்பாத்திரம் மட்டுமே நடிக்க வேண்டும் நாயகன்கள்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற அஜண்டா கடந்த சில ஆண்டுகளாக மாறி தற்போது காமெடி நடிகர்களும் நாயகன்களாக நடித்து வருகின்றனர். அதில் குறிப்பாக நடிகர்கள் சூரி, சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோர் அதிக அளவில் நாயகனாக நடித்து வருகின்றனர்.
இந்த லிஸ்டில் யோகி பாபு மட்டும் நாயகனாக மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்று இல்லாமல் காமெடி கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். ஆனால் சூரி மற்றும் சந்தானம் இருவரும் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகின்றனர். அந்த நாயகன் அந்தஸ்தை விட்டுகொடுக்கக் கூடாது என்று அப்படி நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி.
மண்டாட்டி படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு:
இந்த நிலையில் இந்த மண்டாட்டியின் படம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சூரி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி மண்டாட்டி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… இன்று மாலை வெளியாகிறது விஷாலின் மகுடம் பட டீசர்
மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A storm is coming to the big screen 🌊🔥#Mandaadi worldwide theatrical release on September 4, 2026 !#Mandaadifromsept4@sooriofficial #Suhas @elredkumar #vetrimaaran @rsinfotainment @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5#sathyaraj @bala_actor… pic.twitter.com/Vn1c2C22p1
— RS Infotainment (@rsinfotainment) June 11, 2026
Also Read… ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!



