AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் 50-வது படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குநர் – வைரலாகும் தகவல்

Suriya 50 Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் சூர்யா நடிப்பில் 50-வது படமாக உருவாக உள்ள படத்தை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 50-வது படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குநர் – வைரலாகும் தகவல்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 14:23 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் கருப்பு படம் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இன்றி படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் வித்யாசமான கதை களத்தில் உருவாகி உள்ள அந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் உடன் கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் தெலுங்கு சினிமா இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா:

‘கருப்பு’ (Karuppu) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் பல படங்கள் வரிசையாக உள்ளன. அவர் தனது மைல்கல்லாக அமையும் 50-வது படத்தை நோக்கி நகரும் நிலையில், ‘சூர்யா 50’ படத்தை இயக்க இயக்குனர் அனில் ரவிபுடி பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… அஜித் குமாரி 64-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: ஸ்லம் டாக் படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் – விஜய் சேதுபதி!

Follow Us