AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் மமுடம் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Magudam Movie Teaser Update | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். அதன்படி அவர் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ள மகுடம் படம் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் மமுடம் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
மகுடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2026 19:07 PM IST

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஷால் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் அதிக அளவில் நடித்து மக்களிடையே ஆக்‌ஷன் நாயகனாக பதித்தார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த விஷால் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். அதன்படி நடிகர் விஷால் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மகுடம். இந்தப் படத்தின் மூலமாகதான் இவர் இயக்குநராக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆக உள்ளார்.

அதன்படி இந்த மகுடம் படத்தின் இயக்குநராக முன்பு ரவி அரசு அறிவிக்கப்பட்டு இருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பில் இவர்தான் படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாகவும் படத்தினை நாயகன் விஷாலே இயக்குவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

ஜூன் 10-ம் தேதி வெளியாகும் மகுடம் படத்தின் டீசர்:

இந்த நிலையில் இந்தப் படத்தின் மூலமாக நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்த மகுடம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மகுடம் படத்தின் டீசர் வருகின்ற 10-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… VJ Manimegalai: இந்து மற்றும் முஸ்லீம் என இரு முறைப்படி கிரஹப்பிரவேசத்தை நடத்திய தொகுப்பாளினி மணிமேகலை!

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன் – வைரலாகும் தகவல்

Follow Us