AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Sethupathi: ஆக்ஷன் நாயகனாக விஜய் சேதுபதி.. வெளியானது ஸ்லம் டாக் பட டீசர்!

Slum Dog- 33 Temple Rode movie Teaser: தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு. இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்துவரும் நிலையில், இன்று 2026 ஜூன் 8ம் தேதியில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vijay Sethupathi: ஆக்ஷன் நாயகனாக விஜய் சேதுபதி.. வெளியானது ஸ்லம் டாக் பட டீசர்!
ஸ்லம் டாக் பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Jun 2026 18:19 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு (Slum Dog – 33 Temple Rode) . இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கியுள்ள நிலையில், நடிகையும், பூரி ஜெகன்நாத்தின் மனைவியுமான சார்மி தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில், இவர் இப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, பிரபல நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் (Dhanush) வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்துவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக தயாராகியுள்ளது.

இந்நிலையில் விரைவில் இப்படத்தின் ரிலீசிற்கு படக்குழு திட்டமிட்டுவரும் நிலையில், இன்று 2026 ஜூன் 08ம் தேதியில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 1:15 நொடிகள் கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குநர் கீது மோகன் தாஸின் பர்த்டே.. ஸ்பெஷல் BTS வீடியோவை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு!

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு திரைப்படத்தின் டீசர் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு:

இந்த ஸ்லம்டாக் படமானது வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் டைட்டிலே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பிச்சைக்காரனாகவும் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன், பேமிலி மற்றும் சண்டை காட்சிகள் என படமே சிறப்பாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள நிலையில், இருவரின் காம்போ சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் டி 55 படத்திலிருந்து வெளியாகும் முக்கிய அப்டேட்

மேலும் இவர்களுடன் இப்படத்தில் பிரபல நடிகை தபு மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஆக மொத்தத்தில் இப்படமாது அதிரடி ஆக்ஷன் மற்றும் பேமிலி என சிறப்பான படமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகளில் படம் இருக்கும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பையும் படக்குழு விரைவில் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Follow Us