AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் டீசர் எவ்வளவு டியூரேசன் – படக்குழு கொடுத்த அப்டேட்

Slum Dog 33 Road Movie Teaser Duration | தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தற்போது பிசியாக நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள ஸ்லம் டாக் 33 ரோடு படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் அதன் நீளத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் டீசர் எவ்வளவு டியூரேசன் – படக்குழு கொடுத்த அப்டேட்
ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2026 15:39 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன விஜய் சேதுபதி தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் தொடர்ந்து வில்லன் மற்றும் சிறப்பு வேடங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகார்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு வில்லனாக நடித்து உள்ளார். மேலும் அந்தப் படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடர்ந்து மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தாலும் வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தாலும் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நட்டித்து உள்ள படம் ஸ்லம் டாக் 33 ரோட் படம். இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் அதுகுறித்த படேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் டீசர் எவ்வளவு டியூரேசன்:

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படம். இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதன்படி ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் டீசர் மொத்தம் 75 விநாடிகளை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரேனிகுண்டா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Antony: இன்னும் 3 ஆண்டுகளில் கிராமத்தில் குடிபெயர பிளான் – விஜய் ஆண்டனி பேச்சு!

Follow Us