அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் இணையும் மிஷ்கின்.. அட இந்த படத்திலா?
Ashwath Marimuthu And Mysskin Combo: தமிழ் மக்கள் மத்தியில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் நெருக்கமானவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. மேலும் இவர் படங்களில் சிறப்பு வேடத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் மிஷ்கின் நடிக்கவுள்ளாராம். அது எந்த படம் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் டிராகன் (Dragon). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். காதல், எமோஷனல் மற்றும் அப்பாவின் அன்பு போன்ற கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஸ்வத் மாரிமுத்துவும் மிக முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களால் கவரப்பட்டார். இதையடுத்து இவர் சிலம்பரசனின் (Silambarasan) STR51 படத்தில் இணைவதாக அறிவித்திருந்தார். இந்த படமானது காதலின் கடவுளை பற்றிய ஒரு பேண்டஸி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார். தற்போது சிலம்பரசன், இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் படத்தில் இணைந்து பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் (Rajinikanth) தலைவர் 173 (Thalaivar 173) படத்தை இயக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சமீபத்தில் தலைவர் 173 படத்தை தயாரிக்கும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்கூட, அஸ்வத் மாரிமுத்து பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து வீடியோவை வெளியிட்டது. இதனாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில் இப்படத்தில்தான் நடிகரும், இயக்குநருமான மிஷ்கின் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
தலைவர் 173 படத்தில் மிஷ்கின் நடிப்பது குறித்து வைரலாகும் பதிவு:
As Per VP,
Director #AshwathMarimuthu is set to direct the next film starring #Rajinikanth. In this film, #Mysskin will be playing an important role.#Thalaivar173 pic.twitter.com/VmcemeJ35T
— Movie Tamil (@_MovieTamil) June 4, 2026
தலைவர் 173 படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து:
தலைவர் 173 படத்தை இயக்குநர் சுந்தர் சி, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி போன்ற இயக்குநர்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்கள் இப்படத்திலிருந்து சில காரணங்களால் விலகியிருந்தனர். மேலும் தற்போது ரஜினிக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதையை கூறியுள்ளதாகவும், ரஜினிகாந்த் அந்த கதையை முழுமையாக முடித்து அதன்பிறகு அதை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளாராம்.
இதையும் படிங்க: கோலிவுட் முதல் டோலிவுட் வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவுகளின் லிஸ்ட்
இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணியை முடித்த அஸ்வத், சூப்பர் ஸ்டாரிடம் கதை ஸ்கிரிப்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் ஓகே சொன்ன பிறகே, தலைவர் 173 படத்தின் இயக்குநராக தன்னை அறிவிக்கவேண்டும் என அஸ்வத் மாரிமுத்து கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ரஜினிகாந்த் கதையை படித்துவிட்டு விரைவில் அதை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது சுயசரிதையை எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.