AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோலிவுட் முதல் டோலிவுட் வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவுகளின் லிஸ்ட்

This Week Theatre Release List Here | 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பிறகு இந்த முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கோலிவுட் முதல் டோலிவுட் வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவுகளின் லிஸ்ட்
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 20:24 PM IST

பரிமளா அண்ட் கோ: தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. முந்தைய வாரங்களில் வெளியான கருப்பு மற்றும் ப்ளாஸ்ட் படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்வைப் பெற்று வருகின்றது. இந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பரிமளா அண்ட் கோ படமும் இணைய உள்ளது. அதன்படி டார்க் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் ஓஜி ஜோடி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ள நிலையில்  தற்போது படம் நாளை ஜூன் மாதம் 05-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்ஹாரம் படம்: நடிகர் பிரஜின் நாயகனாக நடித்து உள்ள படம் சம்ஹாரம். இந்தப் படத்தினை இயக்குநர் ராம் பிரபா எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பிரஜின் உடன் இணைந்து நடிகர்கள் நியா வர்கீஸ், சாரு நிஷா, எஸ் ராஜ்குமார், ராம் பிரபா, தென்றல் ராஜா, கணேஷ் சவரத்தில் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை ஜூன் மாதம் 05-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோலிவுட் டைம்ஸ்: நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மோலிவுட் டைம்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் ராமு சுனில் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் உடன் இணைந்து நடிகர்கள் அங்கீத் பிரதாப், ஷராபுதீன் மற்றும் ரோஷன் ஷானவாஸ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை ஜூன் மாதம் 05-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்

பெத்தி படம்: டோலிவுட் சினிமாவில் நடிகர் ராம் சரண் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் பெத்தி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்து உள்ளார். இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுத் இயக்கிய இந்தப் படம் இன்று 04-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Ajith Kumar: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!

Follow Us