ஜன நாயகன் குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – வைரலாகும் தகவல்
Theatre Owners Association Requested CM Vijay For Jana Nayagan Movie | தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் சமீபத்தில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்க சென்ற போது ஜன நாயகன் படத்தை வெளியிடுவது குறித்து கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் நாட்டில் சினிமாவில் இருந்து முதலமைச்சராக ஆனாவர்களின் பட்டியல் பெருசு என்றே சொல்லலாம். அதன்படி சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி பிறகு முதலமைச்சர் ஆனவர்தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற எம்.ஜிஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆனார். அதவர் உயிரிழந்த பிறகு அவரது மனைவியும் நடிகையுமான ஜானகி ராமசந்திரன் சிறிது காலம் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இவர் நடிகர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் தளபதி விஜய் தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்று தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்து பலரும் இவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




முதல்வரிடம் கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்:
சமீபத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் குழு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முதல்வர் விஜயைச் சந்தித்தபோது, ஜன நாயகன் படத்தில் பெருமளவிலான பணம் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டதுடன், எப்படியாவது அப்படத்தை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு முதலமைச்சர் தளபதி விஜய் மௌனமாகத் தலையசைத்து ஒப்புதல் அளித்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்ற இந்த நிலையில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) இதுவரை சான்றிதழை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… தேதி குறிச்சாச்சு… நூறு சாமி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan BUZZ – Recently, when the exhibitors’ committee went to meet #CMVijay to convey their requests, they mentioned that a huge amount of money is stuck with the movie and requested that it be released soon somehow. #ThalapathyVijay has silently “nodded” his head. The… pic.twitter.com/huFonCjOHB
— Movies Singapore (@MoviesSingapore) June 3, 2026
Also Read… கருப்பு படத்தில் டெலீட்டட் காட்சிகள் குறித்து எடிட்டர் கலைவாணன் ஓபன் டாக்