ரேனிகுண்டா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
Renigunta 2 Movie First Look Poster Out Now | தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரேனிகுண்டா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 04-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரேனிகுண்டா. ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜானி நாயகனாக நடித்து இருந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்ரவரித்தியின் மகன் ஆவார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஜானி உடன் இணைந்து நடிகர்கள் சனுஷா, நிஷாந்த், சந்தீப், தீப்பெட்டி கணேசன், தமிழ், எஸ்.இளங்கோ, பதுங்கு குழி, கேப்டன் கணேஷ், பில்லி முரளி, ரோஜாபதி, நந்தா சரவணன், ஜாஸ்பர், சுஜாதா சிவகுமார், சஞ்சனா சிங், ஜூலியட் மற்றும் ரிஷா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் பன்னீர்செல்வம் 18 வயசு, கருப்பன் மற்றும் ஐஸ்வர்யா முருகன் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். இதி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.




ரேனிகுண்டா 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி:
இந்தப் படங்களை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பன்னீர்செல்வம் மீண்டும் படத்தை இயக்க உள்ளார். அதன்படி அவரது இயக்கத்தில் முன்னதாக 2009-ம் ஆண்டு வெளியான ரேனிகுண்டா படத்தின் அடுத்தப் பாகத்தை இயக்க முன்வந்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Launching the first look poster of #Renigunta2 – Best wishes to the entire team..
A Film by @Directorpanneer @pff_offl @kings_studio_ @johnnyjohnny_ @Shali_Nivekas @Nish_th @tamizhs82789116 @manuravi_7 @pradeepmaiam @ArunPanneeroffl @jesinthaammu @RamamoorthyVela @manuravi_7… pic.twitter.com/CvwOeyhJ8M
— VijaySethupathi (@VijaySethuOffl) June 6, 2026
Also Read… சந்தானத்தின் லவ் பைட் படம் குறித்து பேசிய தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி