சந்தானத்தின் லவ் பைட் படம் குறித்து பேசிய தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி
Producer Archana Kalpathi talks about Love Bite movie | தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வரும் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் லவ் பைட். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் சந்தானம். சின்னத்திரையில் இருக்கும் போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சந்தானம் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சந்தானம் காமெடிகள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு சந்தானம் காமெடி இல்லாத படங்கள் கோலிவுட்டில் வெளியாகவில்லை என்பது போல தொடர்ந்து படங்களில் படு பிசியாக நடித்து வந்தார். காமெடியில் உச்சத்தில் இருந்த நடிகர் சந்தானம் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரை காமெடியனாக எந்த அளவிற்கு மக்கள் ஏற்றுக் கொண்டனரோ அதே அளவிற்கு நாயகனாகவும் நல்ல வரவேற்பைப் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சந்தானம். நாயகனாக தமிழ் சினிமாவில் சந்தானம் நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் சந்தானம் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் லவ் பைட். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




லவ் பைட் படம் குறித்து பேசிய தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி:
நாங்கள் பல்வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்கி வருகிறோம். பார்வையாளர்களுக்குப் புதுமையான ஒன்றை வழங்க AGS-இல் நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அந்த வகையில், முற்றிலும் மாறுபட்ட பாணியில் உருவாகியுள்ள எங்கள் அடுத்த திரைப்படம் ‘லவ் பைட்’.
படம் முழுவதும் பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். சந்தானம், விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற கலைஞர்களின் பங்களிப்போடு, இப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு ஹாரர்-காமெடி (horror-comedy) திரைப்படமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sigma Style: ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் நடனத்தில்.. சிக்மா பட ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ArchanaKalpathi about #LoveBite
– We are making films in different genres, and at AGS, we continuously strive to bring something fresh to the audience. Our next film is Love Bite, which belongs to a completely different genre.
– The audience will be laughing throughout the… pic.twitter.com/b6gYo67YTW
— Movie Tamil (@_MovieTamil) June 5, 2026
Also Read… லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியானது தி ஒன் படத்தின் டைட்டில் மோஷன் டீசர்