லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியானது தி ஒன் படத்தின் டைட்டில் மோஷன் டீசர்
The One : Within You - Title Motion Teaser | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை லிஜோ மோல் ஜோஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவாக உள்ள படம் தி ஒன் வித்தின் யூ. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மோஷன் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மலையாள சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் திலேஷ் போத்தன் எழுதி இயக்கிய படம் மகேஷிண்ட பிரதிகாரம். காமெடி ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடித்து இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாகதான் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல மலையாளப் படங்களில் நடித்து வந்த நடிகை லிஜோ மோல் ஜோஸ் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த இந்த முதல் படமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் என்ற படம் லிஜோ மோல் ஜோஸை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிய வைத்தது. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் நடிகை லிஜோ மோல் ஜோஸிற்கு பல விறுதுகளையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை லிஜோ மோல் ஜோஸ்.
லிஜோ மோல் ஜோஸின் பட டைட்டில் டீசரை வெளியிட்ட சிம்ரன்:
இந்த நிலையில் நடிகை லிஜோ மோல் ஜோஸ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி வேடத்தில் நடித்து உள்ள படம் தி ஒன் வித்தின் யூ. இயக்குநர் ஆதிரன் ரக்கேப்பன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை லிஜோ மோல் ஜோஸ் உடன் இணைந்து நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாவெல் நவகீதன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மோஷன் டீசரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… அங்கீகாரம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!
நடிகை சிம்ரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It looks intriguing!
Best wishes to @dir_aathiran & his entire team for the special beginning !!
Glad to Unveil the First Look and Title Motion Teaser of #TheOne_withinyou
A proud milestone for @harishnioffl
Featuring @jose_lijomol in lead
Directed by @dir_aathiran
Music by… pic.twitter.com/0J0ySCKwqW— Simran (@SimranbaggaOffc) June 4, 2026
Also Read… தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!



