AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thug Life: ஒரு வருடத்தை கடந்தது கமல் – சிம்புவின் தக் லைஃப்.. உண்மையிலே பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவுதானா?

One Year Of Thug Life: கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் கடந்த 2025ம் ஆண்டில் ஜூன் 5ம் தேதியில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் தக் லைஃப். இதை இயக்குநர் மணிரத்னம் இயக்க, அதிரடி கேங்ஸ்டர் கதையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்றோடு (05/06/2026) இப்படம் வெளியாகி ஒரு ஆண்டை கடந்துள்ள நிலையில், உண்மையான வசூல் குறித்து பார்க்கலாம்.

Thug Life: ஒரு வருடத்தை கடந்தது கமல் – சிம்புவின் தக் லைஃப்.. உண்மையிலே பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவுதானா?
தக் லைஃப் திரைப்படம்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Jun 2026 17:56 PM IST

இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் இவரின் இயக்கத்தில் அதீத எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்த படம்தான் தக் லைஃப் (Thug Life). இப்படத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படத்தின் கதையை கமல்ஹாசன்தான் எழுதியிருந்தார். இதை கமலின் ராஜ்கமல் மற்றும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா (Trisha), அபிராமி (Abhirami) மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என தென்னிந்திய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்திருந்தது. இப்படமானது பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லலாம்.

இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களை சோர்வடைய செய்திருந்தது. மேலும் இப்படமானது கிட்டத்தட்ட ரூ 250 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில், அந்த வசூலை பெறவில்லை. இந்நிலையில் இன்று 2026 ஜூன் 5ம் தேதியோடு இப்படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஒரு வருடத்தை கடந்த தக் லைஃப் படத்தின் வசூல் விவரம்:

கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் தக் லைஃப் படமானது மொத்தத்தில் தமிழகத்தில் ரூ 45.10 கொடிகளை வசூலித்துள்ளதாம். தெலுங்கானாவில் ரூ4.10 கோடி, கேரளாவில் ரூ.2.65 கோடி, வட இந்தியாவில் ரூ 2.75 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ. 49.95 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். ஆக மொத்தத்தில் திக் லைஃப் படமானது வெறும் ரூ 98.55 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாம்.

இதையும் படிங்க: நூறு சாமி படம் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்ட கதை – இயக்குநர் சசி பேச்சு!

துக் லைஃப் படமானது ரூ 200 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரானது என்று கூறப்பட்ட நிலையில், இப்படம் ரூ 100 கோடிகள் கூட திரையரங்குகளில் வசூல் செய்யவில்லை. மேலும் இப்படம் 2025ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியில் ஓடிடியில் அறிவிப்பே இல்லாமல் வெளியாகியிருந்தது. கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்த இப்படமானது வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தி வசூல் விவரம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தக் லைஃப் படத்தை முடித்தபிறகு கமல்ஹாசன் அரசியலில் ஆர்வத்தை காட்டிவருகிறார். இவர் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இதற்கு பின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

Follow Us