ஜூலை மாதம் வெளியீட்டை திட்டமிடும் கௌதம் கார்த்திக்கின் ப்ளடி பாலிடிக்ஸ் படம்
Gautham Karthiks Bloody Politics Movie Release Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் நடிப்பில் உருவான ப்ளடி பாலிடிக்ஸ் படம் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் கௌதம் ராம் கார்த்திக். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் ரசிகர்களிடையெ வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சமீப காலமாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜூலை மாதம் வெளியீட்டை திட்டமிடும் ப்ளடி பாலிடிக்ஸ் படம்:
கௌதம் கார்த்திக்கின் ‘பிளடி பாலிடிக்ஸ்’ (Bloody Politics) திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவன், படப்பிடிப்பின் போது கௌதமின் நடிப்பைப் பெரிதும் பாராட்டினார். அத்துடன், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு குறித்தும் அவர் ஒரு குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இது சாத்தியமானால், கௌதம் கார்த்திக்கின் திரைப்படப் பட்டியலில் அடுத்தடுத்து பல சிறந்த படங்கள் இடம்பெறுவதைக் காண முடியும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… நூறு சாமியில் ஸ்வாசிகாவிற்கு பதிலாக அந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என நினைத்தேன் – இயக்குநர் சசி!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The next impressive work from Gautham Karthik’s #BloodyPolitics is planning for July release.
Selvaraghavan plays a major role in this movie, during the shoots selva appreciates Gautham’s work specifically. He also gives a sign for the possible collaboration in nearby future. If… pic.twitter.com/UZoR4mUyjR
— Kolly Censor (@KollyCensor) June 9, 2026
Also Read… தலைவர் 173-ல் டாக்டராக ரஜினிகாந்த்..? அஸ்வத் இயக்கத்தில் இதுவரை நடித்துடாத வேடத்தில் சூப்பர் ஸ்டார்!