AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூறு சாமியில் ஸ்வாசிகாவிற்கு பதிலாக அந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என நினைத்தேன் – இயக்குநர் சசி!

Sasis Nooru Saami Film: தமிழில் இயக்குநர் சசியின் இயக்கத்தில் நூறு சாமி என்ற எமோஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமானது தயாராகியுள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் நேர்காணலில் பேசிய சசி, ஸ்வாசிகாவிற்கு பதிலாக நூறு சாமியில் நடிக்கவைக்க நினைத்த மற்றொரு நடிகை பற்றி தெரிவித்துள்ளார்.

நூறு சாமியில் ஸ்வாசிகாவிற்கு பதிலாக அந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என நினைத்தேன் – இயக்குநர் சசி!
ஸ்வாசிகா பற்றி இயக்குநர் சசிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Jun 2026 11:33 AM IST

இயக்குநர் சசியின் (Director Sasi) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு, சினிமாவில் வெளியாக காத்திருக்கும் படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) ஹீரோவாக நடித்துள்ள நிலையில், நடிகை ஸ்வாசிகா (Swasika) முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது பெண்ணியம் சார்ந்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தை சசி இயக்க, விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் ஸ்வாசிகாதான் மெயின் கதாபாத்திரமாக நடித்துள்ளார். உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள இப்படமானது, வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சசி, ஸ்வாசிகா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாள் வேறொரு நடிக்கவைக்கலாம் என நினைத்ததாக கூறியுள்ளார். அந்த நடிகை யார் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!

நூறு சாமி படத்தில் ஸ்வாசிகாவின் வேடத்தி நடிக்கவிருந்த மற்றொரு நடிகை குறித்து பேசிய சசி:

அண்ட் நேர்காணலில் பேசிய இயக்குநர் சசி, “சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பின், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படம்தான் நூருசாமி. இப்படத்தை பார்க்கும்போது பலரும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை நினைவுப்படித்து பார்ப்பார்கள். இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிடால், இதில் சசிகுமார்தான் ஹீரோவாக நடித்திருப்பார். லப்பர் பந்து படத்தை பார்த்துவிட்டு, ஸ்வாசிகாவை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க ஆசைப்பட்டேன்.

இதையும் படிங்க: வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம் – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ

ஏனென்றால் கதை அவரை சுற்றியே நகரும். இதில் ஸ்வாசிகா நடிக்க சம்மதிக்காவிட்டால் பூ பட நடிகை பார்வதித்தான் நடிக்கவைக்க நினைத்தேன். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த நூறு சாமி படமானது நிச்சயம் வெற்றிபெறும். நிஜ வாழ்க்கையில், சமூகத்தில் நல்ல பாதிப்பை மற்றும் சில கேள்விகளை இப்படம் எழுப்பும் என நம்புகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நூறு சாமி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், நிச்சயம் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us