இன்று மாலை விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்
Nooru Saami Movie Trailer Update | தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து நாயகனாக பலப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் பெரும்பான்மையான படங்களை அவரது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. அதன்படி விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நூறு சாமி. இயக்குநர் சசி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர்கள் முன்னதாக பிச்சைக்காரன் படத்தில் கூட்டணி வைத்து இருந்தனர்.
அந்தப் படம் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த நூறு சாமி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த நூறு சாமி படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சுவாசிகா நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.




நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்:
அதன்படி நூறு சாமி படம் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை இன்று 08-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். அதன்படி மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பெத்தி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம் – இயக்குநர் விளக்கம்
நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Our all time favourite Maveeran @Siva_Kartikeyan is all set to release the trailer of #Noorusami tomorrow at 6pm ❤️🔥#NoorusamiFromJune19
A #FamilyBiopic.@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel @Sakthi_Raj7 pic.twitter.com/4MLjREpewM
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) June 7, 2026
Also Read… பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!