AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெத்தி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம் – இயக்குநர் விளக்கம்

Director Buchi Babu Sana Talks About Peddi Movie Negative Comments | தெலுங்கு சினிமாவில் கடந்த 4-ம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் பெத்தி. இந்தப் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம் குறித்து இயக்குநர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பெத்தி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம் – இயக்குநர் விளக்கம்
பெத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 15:05 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் பெத்தி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு நாட்களில் வசூலில் கெத்து காட்டி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணி இந்தப் படத்தில் முதன்முறையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் சில நெகட்டிவான விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது. அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு:

அதன்படி புஜ்ஜி பாபு சனா வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, ஒரு திரைப்படப் படைப்பாளியாக, சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும், மேலும் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் யாரையும் சங்கடமாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர வைக்கக்கூடாது. ‘பெத்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்த கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.

திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருளாகக் கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அவ்வாறு உணரப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், எழுப்பப்படும் கவலைகளைப் புரிந்துகொள்கிறோம், மேலும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம்.

கருத்துக்களை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பின் மூலமே சினிமா வளர்கிறது. கதைசொல்லிகளாகிய எங்களுக்கு, மாறிவரும் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு உள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் உண்மையாகவும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Also Read… STR51 படத்திற்கு பிறகே தலைவர்173 இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து.. தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

இயக்குநர் புஜ்ஜி பாபு சனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Follow Us