Ajith Kumar: என்னால் முடிந்தவரை.. தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்பேன் – அஜித் குமார்!
Ajith Kumar Car Racing: கோலிவுட் சினிமாவில் நாயகனாக இருந்து தற்போது பிரபல கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தன்னால் முடிந்தவரை கார் ரேஸில் இருப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் நடிகராகவும், கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் தாய் மோகினி மணி 2கடந்த 026ம் ஆண்டு மே 30ம் தேதியில் காலமானார். இதற்காக துபாயில் (Dubai) பயிற்சி எடுத்துவந்த அஜித் குமார் உடனடியாக மீண்டும் தமிழகம் திருப்பினார். இதையடுத்து தனது தாயின் இறுதிச்சடங்கை முடித்த அவர், மீண்டும் தனது பணிக்கு திரும்பிவிட்டார். தற்போது இவர் துபாயில் கார் ரேஸ் பயிற்சிகளில் தீவிரமாக இருந்துவருகிறார். அஜித் குமாரின் கார் ரேஸ் (Car Racing) அணியும் சிறப்பாக தங்களின் பயிற்சியை செய்துவருகின்றனர்.
இந்த அணியினர் இந்தியாவின் சார்பாக விரைவில் நடக்கவுள்ள, ஐரோப்பா கார் ரேஸ் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான பயிற்சியில்தான் அஜித்தின் அணி இருந்துவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஆங்கில பத்திரிகை அஜித், கார் ரேஸில் இருப்பதும், அவரின் விருப்பம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இதயம் முரளி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த அதர்வா – படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!
தனது கார் ரேஸ் பந்தயம் பங்கேற்பு குறித்து பேசிய அஜித் குமார்:
அந்த நேர்காணலில் அஜித் பேசுகையில், “நான் கார் பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்பேன். என்னால் முடிந்தவரை அதில் இருப்பேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன். கார் பந்தயத்தில் உள்ள எனது கடமைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நான் துபாயில் செலவளித்து வருகிறேன்.
இதையும் படிங்க: இயக்குநர் கீது மோகன் தாஸின் பர்த்டே.. ஸ்பெஷல் BTS வீடியோவை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு!
அதே சமயம் என் குடும்பம் இந்தியாவில் உள்ளது. பந்தயத்தில் எனது தொடர்ச்சியான பங்கேற்பை எதிர்பார்க்கும் பொறுப்புகள் இருப்பதால், நான் தற்போது ரேஸிற்காக அதிக நேரம் செலவிடுகிறேன். நாங்கள் தற்போது 2027 ஆம் ஆண்டுக்கான எங்கள் பந்தய அட்டவணையைத் திட்டமிட்டு வருகிறோம்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தனது கார் ரேஸ் பந்தயத்தின் பங்கேற்பு குறித்து அஜித் குமார் பேசியது தொடர்பான பதிவு:
I will continue to participate in car racing. For as long as I can, I will remain in it. I wish to participate in car racing every year. Due to my commitments in car racing, I have been residing in Dubai for the past 3 years, while my family is in India. Since there are… pic.twitter.com/3s3GfrjYcA
— Movies Singapore (@MoviesSingapore) June 8, 2026
நடிகர் அஜித் குமார் வரும் 2027ம் ஆண்டு வரையிலான தனது கார் ரேஸ் அட்டவணையை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு நடிகராக இருப்பதாய் மறந்து முழுவதுமாக கார் ரேஸில் இறங்கியுள்ளார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.