AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிம்பு உடனான கூட்டணியை உறுதி செய்த டியூட் பட இயக்குநர்

Director Keerthiswaran talks about Simbu movie | தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் டியூட். இந்தப் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடுத்ததாக நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

சிம்பு உடனான கூட்டணியை உறுதி செய்த டியூட் பட இயக்குநர்
சிம்பு மற்றும் கீர்த்தீஸ்வரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 13:05 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது இவரது உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் தற்போது தமிழ் சினிமா இயக்குநராக வலம் வருகிறார். இவர் கடந்த 2025-ம் ஆண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டியூட். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். இவர் இயக்குநராக அறிமுகம ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் டியூட் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடியே மட்டும் இன்று தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக டியூட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசனின் படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமீபத்திய விருது விழாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்பு உடனான கூட்டணியை உறுதி செய்த டியூட் பட இயக்குநர்:

நான் தற்போது எனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். இது ஒரு அதிரடியான, அதே சமயம் உணர்ச்சிகள் நிறைந்த கதையாக அமையும். இதற்கு ஒரு நட்சத்திர நாயகன் தேவை; அந்த வகையில் எஸ்.டி.ஆர் (STR) தான் அதற்குப் பொருத்தமானவர். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்; அதற்காகவே இந்தக் கதையை எழுதி வருகிறேன். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Con City: ரசிக்கத்தக்க குடும்ப பொழுதுபோக்கு… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? – முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Peddi: 5 நாட்களில் வசூலில் சாதனை.. பெத்தி திரைப்படத்தின் அபார வசூலை அறிவித்த படக்குழு!

Follow Us