பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா!
Pradeep Ranganathans New Film: தமிழில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் இறுதியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படமானது வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதனின் புது படம் பற்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்து, தற்போது நடிகராக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, தனது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாக்கிய படம்தான் லவ் டுடே (Love Today). இப்படமும் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு டிராகன் (Dragon), டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். இப்படங்களை இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்தது. அதில் இறுதியாக வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து யார் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் ?, எப்போது அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என மக்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துவருகிறது. இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தில் பேசியிருந்தார். அதில் பேசிய அவர், பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: STR51 படத்திற்கு பிறகே தலைவர்173 இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து.. தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி:
அந்த நேர்காணலில் அர்ச்சனா பேசுகையில், “பிரதீப் ரங்கநாதனின் புது படத்திற்காக நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம், அவர் அப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தொடர்பான கதையை எழுதுவதில் தீவிரமாக இருக்கிறார்” என அதில் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசிய வீடியோ:
#ArchanaKalpathi Recent
– We are Most excited for #PradeepRanganathan‘s Film, he is directing and acting in it.
– Now, he is work on the climax writing of the film.pic.twitter.com/jvcYaZKbXS— Movie Tamil (@_MovieTamil) June 5, 2026
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக புது அவதாரம்:
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளாராக புதிய படத்தை தயாரிக்கவுள்ளாராம். இதை அவரின் உதவி இயக்குநர் இயக்கும் நிலையில், மமிதா பைஜூ இதில் லீட் நாயகியாக நடிக்கிறாராம். மேலும் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய திரைப்படத்தின் புரோமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் புரோமோவுடன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு பிரதீப் ரங்கநாதன் முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.