AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Peddi: ஒரே வாரத்தில் உலகமெங்கும்.. வசூலில் சாதனை படைத்த பெத்தி.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Peddi Movie 7 Days Collection: தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரணின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் பெத்தி. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் அதிக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Peddi: ஒரே வாரத்தில் உலகமெங்கும்.. வசூலில் சாதனை படைத்த பெத்தி.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?
பெத்தி திரைப்பட வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Jun 2026 14:59 PM IST

டோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பெத்தி (Peddi). இப்படத்தில் ராம் சரண் ஆக்ஷன் அதிரடி நாயகனாக நடிக்க, நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்திருந்தார். இது ஜான்வி கபூர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்தை ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தை இயக்கியிருந்த இயக்குநர் புச்சி பாபு சனா (Bhuchi Babu Sana) இயக்கியிருந்தார். அதிரடி கிராமத்து விளையாட்டை மையமாக கொண்ட கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது.

இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்த நிலையிலும், ராம் சரணின் ரசிகர்களால் இப்படத்திற்கு இன்னும் வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகமெங்கும் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

7 நாட்களில் உலகமெங்கும் பெத்தி படத்தின் வசூல் விவரம்:

இயக்குநர் புச்சி பாபு சனா மற்றும் ராம் சரணின் கூட்டணியில் 2வது உருவாகியிருந்த படமாக பெத்தி அமைந்தது. இதனால் இப்படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்புகள் இருந்துவந்த நிலையில், இப்படத்தில் ஜான்வி கபூரை வெறும் கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும், பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் சில காட்சிகள் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ

இத்தனை நெகடிவ் விமர்சனங்களை கடந்தும் ராம் சரணின் பெத்தி படமானது வெறும் 7 நாட்களில் உலகமெங்கும் சுமார் ரூ 345. கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெத்தி திரைப்படத்தின் 7வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

பெத்தி படமானது கிரிக்கெட், குஸ்தி, மற்றும் ரன்னிங் போன்ற விளையாட்டு சம்பந்தமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ஒரு மலை கிராமத்தில் வாழும் இளைஞன் தனது கிராமத்திலுள்ள இளைஞர்களும் பட்டணம் சென்று அனைத்திலும் முன்னேறவேண்டும் என நினைக்கிறான். அவர்களுக்கு முன்னோடியாக கிராமத்திலிருந்து பட்ட்டணம் சென்று குதி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு பெருமை பெற்று சாதனை பாதித்த இளைஞராக ராம் சரண் இப்படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன், விளையாட்டு போன்ற கதைக்களத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us