AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ

29 movie deleted scene out now | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 29. இந்தப் படத்தில் இருந்து டெலீட்டட் காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ
29 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 13:55 PM IST

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ரத்ன குமார். இந்தப் படத்தில் நடிகர்கள் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் கதையின் நாயகன் மற்றும் நாயகியாகி நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கலிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இயக்குநர் ரத்ன குமார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஆடை படம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படம் வித்யாசமான கதையை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான குளு குளு படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து இயக்குநராக ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களுக்கு திரைக்கதையையும் வசனத்தையும் எழுதி வந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 29. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு:

இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ராணி நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தொடர்ந்து இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து டெலீட்டட் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் எப்போது?.. திரைத்துறையினர் பகிர்ந்த தகவல்!!

29 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விவகாரம் – 12-ம் தேதி விளக்கம் கொடுக்கும் நடிகர் லாரன்ஸ்

Follow Us