இணையத்தில் வைரலாகும் நடிகர் மணிகண்டனின் புதுப் படத்தின் அப்டேட்
Actor Manikandan Next Movie Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து அடுத்து அடுத்தடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் வசனம் எழுதுபவராக அறிமுகம் ஆன இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் பிறகு கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஃபீல் குட் பாணியில் இருந்ததால் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. மேலும் மக்களின் ஃபேவரட் நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குடும்பஸ்தன். கடந்த 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் மணிகண்டன் எந்தப் படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.




இணையத்தில் வைரலாகும் நடிகர் மணிகண்டனின் புதுப் படத்தின் அப்டேட்:
தொடர்ந்து மணிகண்டனின் படங்களை எந்த இயக்குநர்கள் இயக்குவார்கள் என்று தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்தை, பா. ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சந்தோஷ் குமார் இயக்கவுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… ஒரு நல்ல ஃபீல் குட் படம் பாக்கனுமா? இந்த சுகமானோ சுகமனு என்ற மலையாள படத்தை மிஸ் செய்யாதீர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Actor #Manikandan‘s next film will be directed by Santhosh Kumar, a former associate of #PaRanjith. The film is being produced by Neelam Productions and is titled #MakkalKavalan. pic.twitter.com/62Pdsq0qfz
— Movie Tamil (@_MovieTamil) June 11, 2026
Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்