AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Engal Thangam: சமந்தாவின் மாஸ் கம்பேக்.. முதல் நாளில் எங்கள் தங்கம் படத்தின் வசூல் இத்தனை கோடியா?

Engal Thangam Movie First Day Collection: சமந்தா ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் ஆக்ஷன் நாயகியாக நடித்திருந்த புது படம் எங்கள் தங்கம். இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியான நிலையில், முதல் நாளில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Engal Thangam: சமந்தாவின் மாஸ் கம்பேக்.. முதல் நாளில் எங்கள் தங்கம் படத்தின் வசூல் இத்தனை கோடியா?
எங்க தங்கம் படத்தின் முதல் நாள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jun 2026 14:53 PM IST

தெலுங்கு சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்து, தென்னிந்திய சினிமாவையே ஆட்சி செய்துவரும் நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு இந்த பிரம்மாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம்தான் எங்கள் தங்கம் (Engal Thangam) (மா இன்டி பங்காரம்). இந்த படத்தில் சமந்தா ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ள நிலையில், இதை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி (Nadhini Reddy) இயக்கியுள்ளார். இவருடன் இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிதிமோருவும் (Raj Nidimoru) இணைந்து பணியாற்றியுள்ளார். சமந்தாவின் கம்பேக் படமாக உருவாகியிருந்த எங்கள் தங்கம் படமானது, கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் இப்படமானது ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.

திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில், வெற்றிப்படமாக என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் முடிவில் உலகமெங்கும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்த உலகமும் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன – சகுந்தலம் படம் குறித்து சமந்தா பேச்சு

சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் முதல் நாள் வசூல் :

இப்படத்தில் சமந்தா பல சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். ஒரு குடும்ப பெண்ணாக மாற நினைக்கும் சமந்தாவின், பின்னணி கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சமந்தா ஆக்ஷன் மற்றும் அதிரடி நாயகியாக நடித்துள்ள நிலையில், இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் சுமார் ரூ 13.15 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

இதையும் படிங்க: KHxRK படத்தில் நான் நடிக்கிறேனா? நெல்சன் சார் என்ன பண்ணப்போறாருனு ஆர்வமாக இருக்கு – ஸ்ருதி ஹாசன் பேச்சு!

அதிலும் இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், ஒரு நாயகியின் படத்திற்கு முதல் நாளே ரூ 13 கோடிகளுக்கு மேல் வசூல் என்பது மிகவும் ஆச்சர்யமானது என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

எங்கள் தங்கம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இப்படமானது தமிழில் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் சிறப்பாக வெளியாகிவருகிறது. இதில் சமந்தா மற்றும் கௌதமியை தவிர பெரிதும் பரிட்சயமான நடிகர்கள் யாரும் இல்லை என்றாலும், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

Follow Us