Viral Video : ஏன் எங்கு சென்றாலும் நடனமாடுகிறீர்கள்.. மீண்டும் வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!
Indian Tourists Dancing For Shah Rukh Khan Song In Vietnam | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியர்கள் சிலர் வியட்நாமில் ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக பலரும் தங்களது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், இந்தியர்கள் சிலர் வியட்நாமின் (Vietnam) ஹனோய் (Hanoi) ரயில் தெருவில் நடனமாடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹனோய் ரயில் தெருவில் நடனமாடிய இந்தியர்கள்
வெளிநாட்டவர்கள் பலர் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை போல இந்திய பொதுமக்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு சுற்றுலா செல்லும் அவர்கள் அங்கிருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். ஆனால், சிலர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இந்தியா பாடல்களுக்கு நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அத்தகைய மேலும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் விற்பனை செய்ய இருந்த சமோசாக்களின் மீது கால் வைத்திருந்த வியாபாரி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இந்தியர்கள் சிலர் வியட்நாமின் ஹனோய் பகுதியில் உள்ள ரயில் தெருவில் ரயில் தண்டவாளத்தின் மீது நின்றுக்கொண்டு ஷாருக்கானின் தைய தைய பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வியட்நாமில் நிறவெறிக்கு உள்ளான இந்தியர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். நீங்கள் ஏன் எங்கு சென்றாலும் நடனமாட வேண்டும் என நினைக்கின்றீர்கள். இந்தியாவின் மதிப்பை குறைக்காதீர்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.