AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹபீபி படத்தை தமிழக மக்களும் பிரபலங்களும் கொண்டாட காரணம் என்ன?

Why People Clebrating The Movie Habeebi | தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ஒரு ஃபீல் குட் படம் ஹபீபி. இந்தப் படத்தினைப் பார்த்த பிரபலங்கள் ரசிகர்களும் தொடர்ந்து படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஹபீபி படத்தை தமிழக மக்களும் பிரபலங்களும் கொண்டாட காரணம் என்ன?
ஹபீபிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 21:35 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் பெரும்பாலும் இஸ்லாமியர்களைக் காட்டும் விதம் என்பது ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து நெகட்டிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகளாகதான் இருக்க வேண்டும் என்று சாதாரண மக்களின் மனதில் ஆழமாக  ஒரு எண்ணம் தோன்றும் அளவிற்கு இந்த சினிமா அவர்களைக் காட்டியுள்ளது. தற்போது தமிழ் நாட்டில் உள்ள பல இஸ்லாமிய இளைஞர்கள் பள்ளியில் படிக்கும் போதே உடன் படிக்கும் மாணவர்களால் நீ பாகிஸ்தான்காரன் தானே. நீ எல்லாம் தீவிரவாதி தான என்ற கேள்விகளால் காயமைடைந்து இருக்கின்றனர். பள்ளி படிக்கும் வயதில் இருந்தே ஒரு இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் தான் இந்தியன் என்பதையும் இந்தியா மீது உள்ள பற்றையும் தினம் தினம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலை மற்ற மதத்தை பின்பற்றுபவர்களுக்கு இந்தியாவில் இருந்ததா என்றால் அப்படி இல்லை. இப்படி ஒரு நிலை இந்தியாவில் இருக்க மிகப் பெரிய காரணமாக சினிமா இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் உட்பட மற்ற மொழி சினிமாவில் இஸ்லாமியர்களைக் சித்தரிக்கும் விதத்தில் மாற்றம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அது சற்று ஆறுதாலாக இஸ்லாமியர்களுக்கு இருந்து வந்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமியரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் தற்போது எடுத்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.

இவ்வளவு சாதாரணமானதுதான் முஸ்லிகளின் வாழ்க்கை:

இந்த ஹபீபி படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதன்படி 1980களில் தொடங்குவது போல இந்தப் படத்தின் கதை ஆரம்பமாகி தற்போது வரை காட்டப்பட்டு இருந்தது. முகமது யூசுஃப் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கஸ்தூரி ராஜா ஒரு தறி தொழிலாளியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டாவதாக ஒரு மகன் பிறக்கிறான். அபுதாஹீர் என்று பெயர் வைக்கப்பட்ட அவன் பிறந்ததில் இருந்து வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தில் தறி நெய்வதில் இருந்து உலகமயாக்களில் எப்படி எல்லாம் அவர்களின் வாழ்க்கை மாறி இருக்கிறது என்பதை மிகவும் இயல்பாக காட்டியிருந்தனர். இந்தப் படத்தைப் பார்க்கும் இஸ்லாமியர் அல்லாத பலருக்கு இவ்வளவுதான் ஒரு இஸ்லாமியர்களின் வாழ்க்கையா என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் இந்தப் படத்தில் இஸ்லாமியராக நடித்த இயக்குநர் கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் அவர்களின் வாழ்க்கையும் நம்மைப் போல மிகவும் சாதரணமானது என்றும் நாம் வேறு ஒரு கடவுளை நம்புவது போல அவர்கள் அல்லாவை நம்புகிறார்கள் என்று தெரிவித்து இருப்பார். அவ்வளவுதான் இந்தப் படம்.

Also Read… இந்த போட்டோவில் சிலம்பரசனுடன் இருக்கும் முக்கிய பிரபலம்.. அது யார் தெரியுமா?

மலையாள படங்களின் ரசிகரா நீங்க? அப்போ ஹபீபியை மிஸ் செய்யாதீர்கள்:

தமிழ் சினிமாவில் தற்போது மலையாள சினிமாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகின்றது. அப்படி அந்தப் படங்கள் கொண்டாடக் காரணம் அவை அனைத்தும் மிகவும் இயல்பானதாகவும் ரியலிஸ்டிக்காகவும் இருந்ததுதான் காரணம். அப்படி ஒரு படமாக ஹபீபி தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது என்று ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த ஹபீபி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… முதல்வர் விஜயை நேரில் சந்தித்தபோது அவர் சொன்னது என்ன? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

Follow Us