Viral Video : ஐஐடி பாம்பேவில் No Bag Day.. வித்தியாசமான யோசனைகள் உடன் வந்த மாணவர்கள்.. வைரல் வீடியோ!
No Bag Day In IIT Bombay | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஐஐடி பாம்பே மாணவர்கள் ஒரு நாள் பேக் இல்லாமல் வந்தது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஐஐடி பாம்பேவில் மாணவர்கள் ஒருநாள் பைகள் இல்லாமல் வந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐஐடி பாம்பேவில் No Bag Day – வைரல் வீடியோ
மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் அத்தியாவசியமான ஒன்று. இதன் காரணமாக தான் பரபரப்பான நாட்களுக்கு மத்தியில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதேபோல பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தான் ஐஐடி பாம்பேயில், மாணவர்களுக்கு பேக் எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பாராகிளைடிங்கில் இப்படி ஒரு ஆபத்தா?.. பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மாணவர்கள் பேக்குகள் இல்லாமல் வகுப்பறைக்குள் வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பொருட்களை எடுத்துவர வித்தியாசமான முறைகளை கையாண்டுள்ளனர். அதாவது பிளாஸ்டிக் பெட்டிகள், அட்டை பெட்டிகள், துணி பைகள், துணியை பைபோல வடிவமைத்து மிகவும் வித்தியாசம் வித்தியாசமாக அவர்கள் தங்களது உடமைகளை வகுப்பறைக்கு எடுத்து வருகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வீடியோவுக்காக சிறுவனை முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்த தந்தை.. வைரலாகும் ஷாக் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.