AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பெங்களூரில் Zombie Drug?.. அசையால் நின்ற நபரால் சர்ச்சை.. விளக்கம் அளித்த பெங்களூரு போலீஸ்!

Video Claiming Man Consumed Zombie Drug Goes Viral | சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரு சாலையில் இளைஞர் ஒருவர் அசையாமல் நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : பெங்களூரில் Zombie Drug?.. அசையால் நின்ற நபரால் சர்ச்சை.. விளக்கம் அளித்த பெங்களூரு போலீஸ்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Apr 2026 19:32 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில அதிர்ச்சியையும், சில ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில், பெங்களூரு சாலையில் இளைஞர் ஒருவர் அசையாமல் நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுத்துள்ள பெங்களூரு காவல்துறை விளக்கமும் அளித்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு சாலையில் அசையாமல் நின்றுக்கொண்டு இருந்த நபர்

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகும். அவற்றில் குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியொக்களும் வெளியாகும். இந்த நிலையில், பெங்களூரு சாலையில் இளைஞர் ஒருவர் ஒரே இடத்தில் அசையாமல் நின்றுக்கொண்டு இருப்பது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த இளைஞர் சாம்பி டிரக் (Zombie Drug) என்னும் மோசமான போதையை எடுத்துக்கொண்டதால் அவ்வாறு ஓரே இடத்தில் நிற்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தான் அது குறித்து பெங்களூரு போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து விழுந்த நபர்.. பரபரப்பு வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த இளைஞர் சாலையில் அசையாமல் நின்றுக்கொண்டு இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது.

விளக்கம் அளித்த பெங்களூரு போலீஸ்

இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுத்துள்ள பெங்களூரு போலீஸ், அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது. அதாவது, அந்த நபருக்கு ஏற்கனவே முடக்குவாதம் பிரச்னை உள்ள நிலையில், அதற்காக அவர் மருத்து எடுத்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி அவர் மதுவும் அருந்தியுள்ளார். அதன் காரணமாகவே அவர் அவ்வாறு ஒரே இடத்தில் அசையாமல் நின்றுக்கொண்டு இருந்துள்ளார்.

Follow Us