AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பாராகிளைடிங்கில் இப்படி ஒரு ஆபத்தா?.. பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Woman Injured While Doing Paragliding | சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில அசாத்தியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாராகிளைடிங் செய்த இளம் பெண்ணின் மூக்கு உடைந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பாராகிளைடிங்கில் இப்படி ஒரு ஆபத்தா?.. பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Apr 2026 00:28 AM IST

சமூக ஊடகங்களின் உதவியால் நாள்தோறும் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மற்றும் விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் பாராகிளைடிங் செய்தபோது தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாராகிளைடிங்கில் இப்படி ஒரு ஆபத்தா? – பெண் பதிவிட்ட வீடியோ

உலகம் முழுவதும் பாராகிளைடிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுக்கள் உள்ளன. இந்த விளையாட்டுக்கள் மிகவும் ஆபத்தானவை என்றாலும் அவை சுவாரஸ்யமான இருப்பதன் காரணமாக பலரும் இத்தகைய விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இந்த நிலையில், பாராகிளைடிங் செய்த இளம் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நள்ளிரவு 3 மணிக்கு பெண்ணுக்கு நடந்த 2 சம்பவங்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் தனது பாராகிளைடிங் அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் பாராகிளைடிங் செய்து முடித்ததாகவும், தரை இறங்கிய பின் தங்கள் மீது மற்றொரு பாராசூட் வந்து மோதியதாகவும் அதன் காரணமாக தனது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : புலியை சுற்றி வளைத்த ஜீப்கள்.. வைரல் வீடியோவுக்கு இணையத்தில் குவியும் கண்டனங்கள்!

தன்னுடைய கைடு தன்னை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொண்டதாகவும், தனக்கு காயம் ஏற்பட்ட உடன் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதற்கான கட்டணத்தையும் அவரே செலுத்தியதாகவும் கூறியுள்ளார். இத்தகைய சாகசங்களை மேற்கொள்ளும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற பத்திரத்தில் கையெழுத்து இட்ட உடன் தான் அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், இத்தகைய சாகசங்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us