உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு – அக்டோபரில் உச்சத்தை தொடும் பணவீக்கம்? நிபுணர்கள் எச்சரிக்கை
கடந்த 2026, மே மாதம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.20 சதவிகிதத்தில் இருந்து 4.78 சதவிகிதமாக உயர்ந்தது. குறிப்பாக கிராமங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.85 சதவிகிதமாகவும், நகரங்களில் 4.66 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது. பணவீக்கம் அக்டோபரில் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் கடந்த மே மாதம் சில்லறை பணவீக்கம் 4 சதவிகிதத்திர்கும் கீழ் இருந்தாலும் வரும் மாதங்களில் குறிப்பாக 2026, அக்டோபர் மாதத்தில் பண வீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட டேட்டாவின் படி, கடந்த 2026 ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் 3.48 சதவிகிதமா இருந்தது. அதற்கு அடுத்து 2026 மே மாதம் சில்லறை பணவீக்கம் 3.93 சதவிகிதமாக உயர்ந்தது. உணவுப்பொருட்களின் விலை உயர்வே இந்த சில்லறை பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு
கடந்த 2026, மே மாதம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.20 சதவிகிதத்தில் இருந்து 4.78 சதவிகிதமாக உயர்ந்தது. குறிப்பாக கிராமங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.85 சதவிகிதமாகவும், நகரங்களில் 4.66 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ரயில் பயணிகளை குறி வைத்து நடக்கும் மிகப்பெரிய மோசடி – பணத்தை இழந்து தவிக்கும் பயணிகள்




எல் நினோ குறித்த கவலை அதிகரிப்பு
இந்த 2026 ஆம் ஆண்டில் எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. எல் நினோ ஏற்பட்டால் மழையின் அளவு குறையும் என்றும் அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அரிசி, பருப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
இது தொடர்பாக எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், இந்த 2026, ஜூன மாதத்தில் 11 நாட்கள் இந்தியா முழுவதும் இயல்பை விட 27 சதவிகிதம் குறைவான மழை மட்டுமே பாதிவாகியுள்ளது. மத்திய இந்தியாவில் 48 சதவிகிதமும், கிழக்கு மற்றும் வட இந்தியாவில் 38 சதவிகிதமும் மழையளவு குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் கோடை காலத்தில் பயிர் நடவு தாமதமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க : இனி வங்கிகளில் கடன் வாங்க சிபில் ஸ்கோர் மட்டும் போதாது.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதற்கிடையில் குவாண்ட் இகோ ரிசர்ச் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 2026 – 27 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் 6 சதவிகிதத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைவு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த அழுத்தம் உருவாகலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த மார்ச் 2026 முதல் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை சுமார் 79 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் விலையும் அதிரித்துள்ளன. இதுவும் பணவீக்க சதவிகிதம் உயர்வதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.