இனி வங்கிகளில் கடன் வாங்க சிபில் ஸ்கோர் மட்டும் போதாது.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Cibil Score Not Alone Help You To Get Loan | முன்பெல்லாம் வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் போதுமானதாக இருந்தது. சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்து உரிய ஆவணங்கள் இருந்தால் கடன் கிடைத்துவிடும். ஆனால், தற்போது கடன் பெற சிபில் ஸ்கோர் மட்டுமே போதுமானது அல்ல.
சில நாட்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் (Cibil Score) அதிகமாக இருப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. அதாவது, சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் வங்கியில் கடன் கிடைப்பது சுலபம் என்ற சூழல் இருந்தது. ஆனால், அது தற்போது தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் மட்டுமே வங்கியில் கடன் கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வங்கிகள் கடன் வாங்க சிபில் ஸ்கோர் மட்டுமே போதுமானது அல்ல என கூறுவது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி வங்கிகளில் கடன் வாங்க சிபில் ஸ்கோர் மட்டுமே போதுமானது அல்ல?
முன்பெல்லாம் வங்கிகள் ஒருவருக்கு கடன் வழங்க அவர் எவ்வளவு சிபில் ஸ்கோர் வைத்துள்ளார் என்பதை முதன்மையாக கவனித்து கடன் வழங்கி வந்தன. ஆனால், இப்போது அப்படி அல்ல. காரணம், வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்போது கிரெடிட் ஸ்கோரை தவிர, கடன் பெற விண்ணப்பிக்கும் நபரின் ப்ரொபைலை மதிப்பிடும்போது வரும் நிலைத்தன்மை, கடன் அளவுகள், பணி வரலாறு, கடன் வகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு கடன் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க : பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் இலவச காப்பீடு! பலருக்கும் தெரியாத EPFO திட்டம்




சிபில் ஸ்கோர் சரியாக இருந்தும் கடன் நிராகரிக்கப்பட காரணங்கள்
- வங்கிகள் ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன்பு அவரின் நிலையான வருமானத்தை பார்க்கின்றன. இந்த நிலையில், சீரற்ற வருமானம் ஒருவரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வழிவகுக்கும்.
- வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் ஏற்கனவே தனது வருமானத்தில் 40 முதல் 50 சதவீதம் மாத தவணை செலுத்தினால் அந்த நபரை வங்கிகள் கடனை சார்ந்திருப்பவராக கருதும். இதன் காரணமாக கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் நிலையற்ற வேலை, அடிக்கடி பணி மாறுதல், நிலையான வருமான சான்று இல்லாமல் சுய தொழில் செய்பவர் உள்ளிட்ட பின்னணிகளை கொண்டு இருந்தால் அவரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- சிபில் அறிக்கையில் உள்ள தவறான தனிப்பட்ட விவரங்கள், தீர்க்கப்படாத கடன் போன்றவை நிராகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமையலாம்.
இதையும் படிங்க : ‘சிம் ஸ்வாப் மோசடி’.. அலட்சியமே காரணம்.. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சிபில் ஸ்கோர் சரியாக இருந்து மேற்குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் ப்ரொபைலில் இருந்தால் வங்கிகள் உங்களது கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.