AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காகித ரூபாய் நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி?.. அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்?.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்!!

Plastic Currency Notes: பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை, அழுக்கு மற்றும் ஈரப்பதம் தாங்கக்கூடியவை, மேலும் கள்ள நோட்டுகளைத் தடுக்கும் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கி இதுகுறித்த ஒரு பூர்வாங்கப் பரிசீலனையைத் தொடங்கியது உண்மைதான்.

காகித ரூபாய் நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி?.. அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்?.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்!!
அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்?
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Jun 2026 13:31 PM IST

டெல்லி, ஜுன் 10: இந்தியாவில் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் புழக்கத்தில் உள்ள சாதாரண காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீப நாட்களாக வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தளங்களில் செய்தி ஒன்று காட்டுத்தீயாகப் பரவியது. அதில், “மத்திய அரசு ஜூன் 30 முதல் காகித நோட்டுகளின் தடை செய்யப் போகிறது; அதற்குப் பதிலாக பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் பணத்தைக் கொண்டு வரவுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மனதில் கொண்டு, இந்தத் தகவலால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் தங்களின் பணத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்துப் பெரும் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டது.

இதையும் படிக்க : பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்:

பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போதைக்குக் காகித ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றும் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அரசுத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 30 முதல் காகிதப் பணம் செல்லாது என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் வதந்திகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வதந்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையற்ற பீதிக்குள்ளாக வேண்டாம் என்றும், சரிபார்க்கப்படாத இத்தகைய வதந்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பிஐபி பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

உண்மை நிலை என்ன?

பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை, அழுக்கு மற்றும் ஈரப்பதம் தாங்கக்கூடியவை, மேலும் கள்ள நோட்டுகளைத் தடுக்கும் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கி இதுகுறித்த ஒரு பூர்வாங்கப் பரிசீலனையைத் தொடங்கியது உண்மைதான். ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான சேதமடைந்த காகித நோட்டுகளை மாற்றுவதற்கு ஆகும் செலவைக் குறைக்கவே இந்த மாற்று வழி குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இது இன்னும் ஆரம்பக்கட்ட மற்றும் சோதனை அளவிலான ஆலோசனையிலேயே உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த காகித நாணயங்களையும் ஜூன் 30-க்குள் மாற்றுவது போன்ற எந்தவொரு அவசர முடிவையும் அரசு எடுக்கவில்லை.

இதையும் படிக்க : ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!

அரசு விடுத்துள்ள வேண்டுகோள்:

பொதுமக்கள் இதுபோன்ற சரிபார்க்கப்படாத, ஆதாரமற்ற சமூக வலைத்தளச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு எப்போதும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்தொடருமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உங்களிடம் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எப்போதும் போல முழு சட்டப்பூர்வத் தன்மையுடன் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என தெளிவுப்படுத்தியுள்ளது.

Follow Us