AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!

Flipkart Announced End Of Season Sale | பிளிப்கார்ட் நிறுவனம் தனது எண்ட் ஆஃப் சீசன் சேலை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி, என்ன என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 20:51 PM IST

உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இ காமர்ஸ் (e Commerce) தளமாக பிளிப்கார்ட் (Flipkart) உள்ளது. இந்த நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். அந்த வகையில், தற்போது தனது எண்ட் ஆஃப் சீசன் சேலை (End Of Season Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் ஃபேஷன் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு மிகச்சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. ஜூன் 09, 2026 முதல் இந்த சேல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் எண்ட் ஆஃப் சீசன் சேலில் என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் என்ன என்ன சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எண்ட் ஆஃப் சீசன் சேலை அறிவித்த பிளிப்கார்ட்

ஜூன் 09, 2026 அன்று தொடங்கும் இந்த சேலை பிளிப்கார்ட் பிளஸ் வைத்திருக்கும் நபர்கள் ஒரு நாள் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அதாவது, இன்று (ஜூன் 08, 2026) முதலே பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் பொருட்களுக்கான விலை குறைப்பு மட்டுமன்றி, உனடனடி வங்கி சலுகைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கார்டுக்கும் அதிகபட்ச வரம்பு என்று உள்ளதால் அது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல, சலுகைகளை பெற குறைந்தபட்ச வரம்பு என்றும் உள்ளது. அதையும் தெரிந்துக்கொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய ரூபாய்க்கு பின்னால் இருக்கும் கலாச்சார, வரலாற்று உண்மைகள்.. முழு விவரம் இதோ!

வங்கி கார்டுகளுக்கான சிறப்பு தள்ளுபடிகள்

பொதுவாக இத்தகைய சேல்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். ஆனால், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு வழக்கமாக 5 சதவீதம் மட்டுமே கேஷ்பேக் வழங்கப்படும். அதுமட்டுமன்றி, கேஷ்பேக்கை விட 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். இந்த சேலில் அதிகமான பொருட்களை வாங்க நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படும். இந்த அம்சத்தின் மூலம்  வட்டி இல்லாமல் அசல் தொகையை மட்டும் மாத தவணை முறையில் செலுத்தலாம்.

இதையும் படிங்க : பத்திரப்பத்திவு முறையில் வந்த முக்கிய மாற்றம்.. இனி நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருக்க வேண்டாம்!

பொருட்களை வாங்குவதற்கு முன்னதாக செல்லர் ரேட்டிங்கை சரிப்பார்ப்பது அவசியம் ஆகும். குறிப்பாக ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்களை வாங்கும்போது அவற்றின் ரிட்டன் பாலிசி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us