பத்திரப்பத்திவு முறையில் வந்த முக்கிய மாற்றம்.. இனி நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருக்க வேண்டாம்!
Big Change In Registration Method | தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னதாக ஆவணப்பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவும் நிலையில், வீட்டில் இருந்தே ஆவணப்பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு முறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, பத்திரப்பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பத்திரப்பதிவு முன்பை விடவும் மிகவும் சுலபமானதாக மாறியுள்ளது. இந்த நிலையில், பத்திரப்பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள அந்த முக்கிய மாற்றம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருகை இல்லா ஆவணப்பதிவு முறையை அமல்படுத்திய அரசு
பொதுவாக பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும், சொத்து பதிவு செய்ய வேண்டும், பட்டா மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். இந்த நடைமுறைக்கு முன்னதாகவே டோக்கன் பெற்று, சட்ட ரீதியான ஆவணங்களை தயார் செய்து, சார் பதிவாலர் அலுவலகம் சென்றால் நாள் முழுவதும் அதற்காகவே செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதற்காக பலரும் தங்களது அலுவலகத்தில் விடுப்பு வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான், தவெக அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : ஓய்வு காலம் குறித்த கவலையே வேண்டாம்.. மாதம் ரூ.20,500 வருமானம் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!




இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு, இணைய வழியில் வருகை இல்லாத ஆவணப்பதிவு முறையை அமல்படுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக தமிழக பத்திரப்பதிவு துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணைய வழியில் ஆவணப்பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இனி பெட்ரோல் விலை குறித்த கவலை இல்லை.. வெறும் ரூ.82-க்கு அறிமுகமானது E-85 பெட்ரோல்!
24 மணி நேரமும் ஆவணங்களை பதிவு செய்துக்கொள்ள முடியும்
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் 24 மணி நேரமும் 365 நாட்களும் இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணங்களை பதிவு செய்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.