பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ?.. காரணம் என்ன?
Plastic Rupee Notes To Introduce In India | இந்தியாவில் தற்போது பருத்து இழையால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நாடும் அதற்கான தனி நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும். அந்த வகையில் தான் இந்தியாவும் சில வகையான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அமலில் வைத்துள்ளது. உதாரணமாக 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் என பல மதிப்புகளில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை ஆராய்ந்து வருகிறது. அதாவது, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ
இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, விநியோகம் செய்வது, பணப்புழகத்தை கவனிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. அதுமட்டுமன்றி, பண பரிவர்த்தனைகளை முறைகளையும் ஆர்பிஐ நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் தான், இந்திய ரூபாய் நோட்டுகள் தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் பருத்தி இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதனை மாற்றி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் லேட்டஸ்ட் ரெப்போ விவரம்!




பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை உருவாக்க காரணம் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி 2012 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத்தது. ஆனால், அந்த முயற்சியில் எதிர்க்கொள்ளப்பட்ட சில தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள், சவால்கள் காரணமாக அந்த திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான், தற்போது 14 ஆண்டுகள் கழித்து ஆர்பிஐ அந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : பே ஸ்லிப் இல்லை என்றால் கிரெடிட் கார்டு கிடைக்காதா?.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்திய ரிசர்வ் வங்கி பாலிமரால் ஆன புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும், பிளாஸ்டிக்கின் நீடித்து உழைக்கும் தன்மையை பயன்படுத்திக்கொள்ளவும், மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுக்க கூடும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் என்ற செய்தி கூறியுள்ளது.